கருணாநிதி உடல்நிலை குறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் நலம் விசாரிப்பு!

--

சென்னை,

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் காவேரி மருத்துவமனை சென்று நலம் விசாரித்தனர்.

உடல்நலமில்லாமல் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்  மருத்துவமனை சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.

இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்து சென்றார்.

அதைத்தொடர்ந்த அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான தம்பித்துரை மற்றும் ஜெயக்குமார் மருத்துவ மனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தனர்.

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உறவினர்களிடமும், மருத்துவர்களிடமும் கருணாநிதிக்கு கொடுக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

மருத்துவமனையைவிட்டு வெளியே வந்த அதிமுக எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை நிருபர்களிடம் கூறியதாவது:

திமுக தலைவர் கருணாநிதி பூரண நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப வாழ்த்துக்கள் கூறினார்.

ஜெயக்குமார் – தம்பிதுரை

மேலும், சசிகலா  சார்பில் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தோம் என்றும் கூறினார்.

ஏற்கனவே ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது திமுக பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் நேரில் சென்று நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

You may have missed