Random image

பாஜ அதிமுக கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு: ஜெயக்குமார்

சென்னை:

பாஜக அதிமுக கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர்  ஜெயக்குமார் கூறி உள்ளார்.

இன்று பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக் குமார், அமித்ஷா தமிழகம் வருவது பாரதிய ஜனதா கட்சியின் உள்விவகாரம் என்றும்,  பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சென்னை வருகையில் உள்நோக்கம் ஏதும் இல்லை என்று கூறினார்.

கட்சியை பலப்படுத்த வழக்கமாக பாஜக தேசியத் தலைவர் மாநிலங்களுக்கு செல்கிறார்.  பாஜகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப் படும் என கூறியுள்ளார்.

மேலும், ஒரே நேரத்தில் தேர்தல் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மற்றும் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற மத்திய சட்ட ஆணையத்தின் ஆலோசனை குறித்த கேள்விக்கு, பதில் அளித்த அமைச்சர், ஒரே நேரத்தில் தேர்தல் விவகாரம் குறித்து சட்ட ஆணையத்திடம் கருத்து கூறியுள்ளதாகவும்,  ஒரே நேரத்தில் தேர்தல்  என்பதை 2021க்கு பிறகு அமல்படுத்தலாம் என்றும் கூறினார்.

லோக் ஆயுக்தா தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு சட்டப்பேரவையில் பதில் கிடைக்கும் என்ற அமைச்சர், கிறிஸ்டி முட்டை நிறுவனத்தில் நடக்கும் வருமான வரி சோதனைக்கும் அரசுக்கும் என்ன சம்மந்தம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் வேலை என்று டிடிவி மீதும் சாடினார்.