Random image

25ந்தேதி: திமுக, காங்கிரசை கண்டித்து ஆளும் அதிமுக கண்டன கூட்டம்!

சென்னை:

மிழக எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக மாவட்ட தலைநகரங் களில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நேற்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.  அப்போது, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக இலங்கையில் நடைபெற்ற விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது நடைபெற்ற போர்க்குற்றத்துக்கு காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சியே காரணம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து,  போர்க்குற்றத்தில் திமுக காங்கிரஸ் கட்சிகள்  ஈடுபட்டதை விளக்கும் விதமாகவும், தமிழர்களுக்கு செய்த துரோகத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்  கண்டன பொதுக்கூட்டம் நடத்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.