16ந்தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: டிடிவி முகாமுக்கு வலை?

சென்னை:

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 16 தேதி அதிமுக தலைமைக் கழக அலுவலகத் தில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில், டிடிவி மற்றும் திவாகரன் முகாம்களில் உள்ள அதிமுக தொண்டர்களை, மீண்டும் தாய்க்கட்சியான அதிமுகவுக்கு இழுப்பது குறித்து விவாதிக்கப்படும் என்றும்,  எதிர் முகாமில் இருப்பவர்களுக்கு பதவி ஆசைகளை காட்டி வலைவீசி மீண்டும் தலைமை கழகத்திற்கு வர அழைப்பு விடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

வரும்  திங்கட்கிழமை (16ந்தேதி)  மாலை 4 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள  அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  நடைபெற உள்ள இந்த  கூட்டத்தில் மாவட்டங்கள் பிரிப்பு, மண்டல பொறுப்பாளர்கள் நியமனம், புதிய  உறுப்பினர் சேர்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது

இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 16ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தின் கட்சி நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.”

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்டம் ரீதியாக தொண்டர் களை ஒருங்கிணைக்கும் பணியில் அதிமுக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது டிடிவி, திவாகரன் என பல முகாம்களில் சிதறி கிடக்கும் அதிமுக தொண்டர்களை திரும்ப தாய்க் கழகத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருப்பதாக வும் கூறப்படுகிறது.  அ

திமுகவில் பல பிரிவுகள் இருக்கும் நிலையில், மற்ற முகாமிலிருக்கும் அதிமுக தொண்டர்களை யும், நிர்வாகிகளையும்  பிரதான அதிமுகவுக்கு  இழுக்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வலைவீசி வருகின்றனர்.

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவை மீண்டும் கட்டுக்கோப்பாக கொண்டு செல்லும் முயற்சியில் அதிமுக தலைமை இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.