19ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை:
அதிமுக., மாவட்ட செயலாளர் கூட்டம் வரும் 19ம் தேதி சென்னையில் நடக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அதிமுக. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
கட்சியின் சட்ட ஆலோசகராக பி.எச்.பாண்டியன் மற்றும் அமைப்புச் செயலாளர்களாக அமைச்சர் விஜயபாஸ்கர், பாப்பாசுந்தரம், முத்துராமலிங்கம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.