பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை: தம்பித்துரை
சென்னை:
பாஜகவிடம் அரசு ரீதியான புரிதல் மட்டுமே உள்ளது அவர்களுடன் அதிமுக கூட்டணி இல்லை அதிமுக எம்.பி.யும், துணை சபாநாயகருடன் தம்பிதுரை கூறினார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தம்பித்துரை, அதிமுக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக உள்ளது. நாடாளுமன்றத்தில் நான் துணை சபாநாயகராக இருக்கிறேன். துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். நாங்கள் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
பாஜக கூட்டணிக்காக கதவை திறப்பதற்கோ, மூடுவதற்கோ தற்போது ஏற்ற சூழல் நிலையில. தேர்தல் வரும்போதுதான் அதற்கான முடிவு எடுக்கப்படும்.
மத்திய அரசுடன் நட்போடு இருப்பது வேறு. கூட்டணி வேறு. நாங்கள் அவர்களுடய கூட்டணி அரசியலில் இல்லை. மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்களோடு நட்புணர்வோடு இருந்தால்தான் மாநில அரசுக்கு தேவையான உதவிகளை பெற முடியும். அந்த அடிப்படையில் தான் நமது முதல்வர் மத்திய அரசோடு நட்புடன் இருந்து வருகிறார்.
மத்தியஅரசோடு நட்பு என்பது வேறு, கூட்டணி என்பது வேறு என்றும் கூறினார். நாடாளுமன்றத்தில், மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி, முத்தலாக் போன்ற பிரச்சனையை முதன்முதலில் எதிர்த்த இயக்கம் அதிமுகதான்.
இவ்வாறு தம்பித்துரை கூறினார்.