நெட்டிசன்:

தராசு ஷ்யாம் முகநூல் பதிவு…

ஜெயலலிதாவின் உழைப்பால் கிடைத்த எம்எல்ஏக்கள் ஓட்டுப் போட்டுக் கிடைக்கும் ராஜ்யசபா சீட்டுகளைத் தாரை வார்ப்பது கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல்!

ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்கிற நினைப்பில் உள்ள அதிமுக சீனியர்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக 2011ல் எதிர்க்கட்சி. வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தம் 2011 மார்ச் 4ஆம் தேதி விஜயகாந்த் போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தார்.

இப்போது கூட்டணிக்காக விஜயகாந்த் வீட்டுக்கு ஓபிஎஸ் போகிறார். அதே மார்ச் 4ஆம் தேதியில்!! தேதியில் ஒற்றுமை.. ஆனால் சேதியில் இல்லை