அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுந்தரவேல் சாலைவிபத்தில் மனைவியுடன் பலி

வேலூர்:

வேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுந்தரவேல், அவரது மனைவி, கார் டிரைவர் உள்பட 3 பேர் பலியாயினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஏகேசி சுந்தரவேல் இன்று காலை ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந் தார்.  கார் விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முற்றிலும் நொறுங்கி, லாரியின் அடியில் சிக்கிக்கொண்டது.

இந்த கோரவிபத்தில், காரினுள் இருந்த 3 பேரும்சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.