காலை: 10.01
அதிமுக தலைமை சசிகலாவிடம் ஒப்படைப்பு.
 

 
காலை 9.57
கண்ணீருடன் உரையாற்றுகிறார் ஓ.பன்னீர்செல்வம். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பலரும் அழுகிறார்கள்.
 

 
காலை 9.55
ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி
 

காலை 9.49
முதல்வர் ஓ.பி.எஸ், எம்.பி.தம்பிதுரை, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன்மேடையில் உள்ளனர்.   ஜெயலலிதா அமரந்த நாற்காலி மேடையில் உள்ளது.

காலை 9,37
அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு கூடியது. மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
ஜெயலலிதா அமர்ந்த நாற்காலி மேடையில் வைக்கப்பட்டுள்ளது.

 
காலை 9.25
மண்டபத்தினுள் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள்

 
காலை 8.15 மணி
முக்கிய பிரமுகர்கள் வருகை.  இது ஓபிஎஸ் கார். அவரை வணங்கி வரவேற்கிறார்கள் சில பிரமுகர்கள். “பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸூக்கு  முதல்வர் என்கிற முறையில் உரிய மரியாதை அளிக்கப்படும்” என்கின்றன அதிமுக வட்டாரங்கள். (முன்னதாக, சசிகலாவுக்கும் ஓ.பி.எஸ்ஸுக்கும் கருத்து மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.)

 
காலை: 8.00 மணி
பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களில்  பெரும்பாலானவர்கள்,  கூட்டம் நடக்கும் மண்படத்தினுள் சென்றுவிட்டார்கள். அழைப்புக்கடிதம் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

 
காலை: 7.00 மணி
பொதுக்குழு குறித்த பேனர்களில் ஜெயலலிதா படம் மட்டுமே உள்ளது.