அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு: சசிகலாவுக்கு பொன்னார் முதல் வாழ்த்து!

சென்னை,

திமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு பாரதியஜனதா கட்சியை சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு மாற்று கட்சியினர் சார்பாக கூறப்பட்ட முதல் வாழ்த்து இதுவே.

அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டு,  பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சசிகலா ஒப்புதலும் தெரிவித்தார்.

இன்று மதுரை வந்த பொன்ராதாகிருஷ்ணனிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர்.

இதனையடுத்து,  மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சசிகலாவிற்கு தனது முதல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.