சிறுபான்மையின மக்களின் அரணாக செயல்படுவோம்! சட்டமன்றத்தில் எடப்பாடி பேச்சு

சென்னை:

சிறுபான்மையின மக்களின் அரணாக அதிமுக அரசு செயல்படும் என்றும், திருத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் பற்றி சிறுபான்மையின மக்கள் அச்சப்பட வேண்டாம்  தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தின் முதல்கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாளான இன்று பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், பல்வேறு அறிவிப்புகளையும், தகவல்களையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

அப்போது,  மத்திய அரசு அமல்படுத்தி உள்ள இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசியவர்,  தமிழக அரசு சிறுபான்மையின மக்களுக்கு அரணாக இருக்கிறது. எம்ஜிஆர், அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு, சிறுபான்மையின மக்களுக்கு காவலாகவே இருக்கும், குடியுரிமை திருத்த சட்டம் பற்றி சிறுபான்மையின மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும்,   அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கூறினார்.

கார்ட்டூன் கேலரி