சென்னை:

த்திரிகையாளர்கள் பிஸ்கட்டுக்காக குலைக்கும்  தெருநாய்கள் என  விமர்சித்த அதிமுக ஐ.டி விங் செயலாளர் ஹரி பிரபாகரனை நீக்கி அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது.

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து இன்று ஓபிஎஸ் தலைமையில் அமைச்சர்கள் இன்று தூத்துக்குடி சென்ற மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். ஆனால், அவர்களுடன் செல்ல பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து அதிமுக இணையதள பொறுப்பாளர்  ஹரி பிரபாகரன்,  டிவிட்டரில், ”மருத்துவமனைக் குள் துணை முதல்வர் இருக்கும்போது பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்க முடியாது. உள்ளே அனுமதிக்கப்படுவதற்கு பதிலாக, பிஸ்கட்டுக்கு குலைக்கும் தெரு நாய்கள் கேட்டில் கட்டி வைக்கப்படுவார்கள்”  என பதிவிட்டிருந்தார்.

இது பத்திரிகையாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து அதிமுகவிடமும் பத்திரிகை யாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். ஹரி பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக, ஹரி பிரபாகரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.