ஓட்டு போட்டா போடுங்க, போடாட்டி போங்க….! தேர்தல் பிரசாரத்தில் தம்பித்துரை விரக்தி

கரூர்:

ரூர் தொகுதி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தம்பித்துரை தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவரை பல இடங்களில் பொதுமக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பி வரும் நிலையில்,தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் தம்பித்துரை விரக்தியாக பேசி வருகிறார்.

கரூர் தொகுதிக்கு தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணி களமிறக்கப்பட்டு தீவிர வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அதிமுக அமைச்சரும், இந்நாள் திமுக  செயலாளருமான செந்தில்பாலாஜி களமிறங்கி வாக்குகளை பிரித்து வருகிறார்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் தம்பித்துரை,  கரூர் அருகேயுள்ள ஏமூர் புதூர் காலனியில் பிரசாரம் செய்தபோது,  அப்பகுதியி பொதுமக்கள், தங்கள் பகுதியில்  குடிநீர் தட்டுப் பாடு நிலவுவதாகவும் பேருந்து வசதியில்லை என்றும் கூறி தம்பிதுரையை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

இதனால் கோபமடைந்த தம்பிதுரை, ‘‘நீங்க ஓட்டு போட்டா போடுங்க, போடாட்டி போங்க. அதற்காக உங்க கைல, காலுல விழ முடியாது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய தம்பித்துரை, இந்த பகுதியில்,  ரூ.81 கோடியில் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. தொகுதியுல் உள்ள  8,000 கிராமங்களுக்குச் சென்றுள்ளேன். இதற்கு முன் இந்த தொகுதி யில்  பலர் எம்பிக்களாக இருந்துள்ளனர். அவர்களெல்லாம் என்ன செய்தார்கள்’’ என்று எதிர்கேள்வி எழுப்பினார்.

தனது தோல்வி உறுதி என்பதை உணர்ந்துகொண்ட தம்பித்துரை இதுபோல் பேசி வருவதாக அதிமுகவினரே கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.