நாடாளுமன்ற தேர்தல்: பிப்ரவரி 4ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அதிமுக அறிவிப்பு

சென்னை:

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் பிப்ரவரி 4ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உள்பட 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் போட்டியிட விருப்பம் உள்ள அதிமுகவினர், அதிமுக தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப் பாளர் இபிஎஸ்  ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதி களில், அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்ற கழக உடன் பிறப்புகள் தலைமை கழகத்தில் 4-2-19 முதல் 10-2-19ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை  தினமும் காலை 10மணி முதல் 5 மணி வரை விண்ணப்பக் கட்டண தொகை யாக ரூ.25 ஆயிரம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி