நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக முன்னிலை

தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதிக்கும் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த வாக்குப்பதிவில், விக்கிரவாண்டியில் 84% வாக்குகளும், நாங்குநேரியில் 66% வாக்குகளும் பதிவாகின. 2021ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் முடிவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இத்தேர்தல் முடிவுகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

இந்நிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி