ராஜன்செல்லப்பா எச்சரிக்கை எதிரொலி: மதுரையில் சர்க்கார் பட காட்சிகள் ரத்து

மதுரை:

டிகர் விஜய் நடித்துள்ள சர்க்கார் படத்தில் அரசு மற்றும் ஜெ குறித்த காட்சிகளை நீக்கா விட்டால் படம் ஓடாது என்று மதுரை மாவட்ட அதிமுக தலைவர் ராஜன் செல்லப்பா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பல தியேட்டர்களில் சர்க்கார் படத்தின்  பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சர்க்கர் திரைப்படத்தில், முன்னாள் முதல்வர் ஜெ குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், அரசின் இலவசங்களை விமர்சித்துள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

சர்க்கார் படத்திற்கு எதிராக தமிழக அமைச்சர்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சர்க்கார் படத்துக்கு எதிராக அதிமுகவில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்காவிட்டால் மதுரையில் ‘சர்கார்’ ஓட அனுமதிக்க மாட்டோம் என மதுரை மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, மதுரை சினிப்ரியா காம்ப்ளக்ஸுக்குள் ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் அதிரடியாக நுழைந்து  ’சர்கார்’ படம் திரையிடலை தடுத்து நிறுத்தினர்.

அதைத்தொடர்ந்து சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் 2.30 மணி காட்சி  திரையிடுவது நிறுத்தப்பட்டது.

இதேபோல் மதுரையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு படம் நிறுத்தப்படும் என்று ராஜன் செல்லப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்கார் படத்தில் ஜெயலலிதா தொடர்பான காட்சிகளையும், வசனங்களையும், அரசின் இலவச திட்டங்கள் குறித்த காட்சிகள்   உடனே நீக்க வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் படம் முடக்கப்படும் என்று அதிமுகவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில்,  சேத்தூரில் உள்ள இ.எஸ்.பி. திரையரங்கில்  ‘சர்கார்’ படம்  எடுக்கப்பட்டு  ‘பில்லா பாண்டி’ என்ற படத்தை திரையரங்கம் ரிலீஸ் செய்துள்ளனர்.

கோவையில் சாந்தி திரையரங்கின் முன் வைக்கப்பட்டுள்ள சர்கார் படத்தின் பேனர்களை கிழித்து அதிமுகவினர் போராட்டம். இதன் காரணமகா பரபரப்பு நிலவியது.

திருச்சியில் சர்க்கார் படம் திரையிடும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விஜயின் பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்க்கார் முடக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக விஜய் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி