நடுக்கடலில் அதிமுக…. ஆலோசனை கூட்டம்!

இனறு அதிமுக எம்.எல்.ஏக்கள் நடுக்கடலில் கப்பலில் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள்.

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வரும்படி அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்று காலை சென்னை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்படும் அவர்கள், ஐ.என்.எஸ். கப்பலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

அங்கு காலை உணவுக்குப் பறகு கப்பலிலிலேயே ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மதிய உணவுக்குப் பிறகு கரை திரும்புகிறார்கள்.

கப்பலை பார்வையிட தமிழக அரசு சார்பாக எம்.எல்.ஏக்கள் அழைத்துச் செல்லப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் பிற கட்சி எம்.எல்.ஏக்களை தவிர்த்து அதிமுக எம்.எல்.ஏக்கள் மட்டும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.