ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி கணவர் படு தோல்வி!

திருச்சி:

திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட, அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி கணவர் முருகன் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஸ்ரீதர் வெற்றி பெற்றுள்ளார்.

ஊரகப்பகுதிகளான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான போட்டியில் திமுகவும், ஒன்றிய கவுன்சிலர்களுக்கான போட்டியில் திமுகவும் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூர் ஒன்றிய கவுன்சிலர்  பதவிக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் ஸ்ரீதர் களமிறக்கப்பட்டார்.

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், அதிமுக எம்எல்ஏவின் கணவர் 558 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஸ்ரீதர் 694 வாக்குகள் பெற்று, 138 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக எம்எல்ஏவின் கணவர் தோல்வி அடைந்துள்ளது, மக்களிடையே அதிமுக மீதான வெறுப்புதான் காரணம் என்று கூறப்படுகிறது.