அதிமுக எம்எல்ஏ.வுக்கு திடீர் நெஞ்சுவலி…தீவிர சிகிச்சை

தேனி:

பெரியகுளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கதிர்காமுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டசபை தொகுதி எம்எல்ஏ கதிர்காமு. கட்சி பிரமுகர் இல்ல துக்க நிகழ்ச்சியில் கதிர்காமு இன்று பங்கேற்றார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனடியாக பெரியகுளம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதைத்தொடர்ந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதனால் இன்று சென்னையில் நடக்கும் அதிமுக எம்எல்ஏ கூட்டத்தில் இவர் பங்கேற்பது கேள்விகுறியாகியுள்ளது.