சென்னை,

திமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை சிறை வைத்துள்ளதாக  பாமகவை சேர்ந்த பாலு தொடர்ந்த வழக்கையடுத்து, போலீசார் இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக  எம்எல்ஏக்களை விடுவிக்கக் கோரி பாமக வழக்கறிஞர் பாலுவால் தொடரப்பட்ட வழக்கில் எம்எல்ஏக்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து அங்கு சென்று விசாரணை நடத்திய போலீஸ் டிஎஸ்பி, அதுகுறித்து அறிக்கை ஒன்றை தயார் சென்று,  இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அத்துடன் சசிகலாவை ஆதரிப்பதாக 119 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றையும் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் எம்எல்ஏக்கள் யாரையும் கைதிபோல அடைத்து வைக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அதைப் படித்துபார்த்த நீதிபதிகள், எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினர் ஏன் வழக்கு தொடரவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

விசாரணையின்போது, வழக்கறிஞர் பாலு, கூவத்தூர் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள பகுதியில் 1000 ரவுடிகளும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற விடுதியில் எம்எல்ஏக்கள் இருப்பதாக முதலில் அரசு தரப்பு தெரிவித்திருந்தது. பின்னர் எம்எல்ஏ விடுதியில் இல்லை என்று அரசு தரப்பு மறுக்கிறது. எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருப்பதாக கூறினாலும் அவர்கள் ஏன் இன்னும் வெளியே வரவில்லை. இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

இதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.