இன்று மாலை நடக்கிறது: அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை:

.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தல் மற்றும், புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 16 தேதி அதிமுக தலைமைக் கழக அலுவலகத் தில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்,  மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை)  மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலவலகத்தில் நடைபெறுகிறது.

இன்று மாலை நடைபெறும் கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி  ஆகியோர் தலைமையேற்பார்கள் என்றும்  இந்த  கூட்டத்தில் மாவட்டங்கள் பிரிப்பு, மண்டல பொறுப்பாளர்கள் நியமனம், புதிய  உறுப்பினர் சேர்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், டிடிவி முகாமை சேர்ந்தவர்களை நீதிமன்றங்கள் கைவிட்டுவிட்டு நிலையில், அவர்களை மீண்டும் அதிமுகவிற்கு அழைப்பு விடுப்பது குறித்தும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேரலாமா என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: AIADMK MLA's. District Secretaries Meeting today evening, இன்று மாலை நடக்கிறது: அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
-=-