பிப். 5ல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை:

பிப்ரவரி 5ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முன்னிலையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தான் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.

அதிமுக.வில் புதிய நிர்வாகிகள் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் இக்கூட்டம் நடைபெறுவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.