28ம் தேதி அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம்

சென்னை:

அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இதில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத் தொடரில் அதிமுக எம்எல்ஏ.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இதில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.