சென்னை,

ரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சி தலைமையகத்தில் நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவைனு இந்த ஆண்டு முதல் கூட்டம் வருகிற 8ம் தேதி (திங்கள்) காலை கூடுகிறது.  இந்த கூட்டத்தில்  தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவையில் உரையாற்றி முதல் கூட்டத்தை தொடங்கி வைப்பார். அதைத்தொடர்ந்து 5 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அதிமுகவில் உள்ள 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு சில எம்எல்ஏக்கள் டிடிவிக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.  தற்போது அதிமுகவுக்கு எதிராக டிடிவி தினகரனும் எம்எல்ஏவாக சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். மேலும், அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களான கருணாஸ், அன்சாரி, தனியரசு போன்றோரும் டிடிவிக்கு ஆதரவாகவே உள்ளனர்.

திமுக கூட்டணி எம்எல்ஏக்களும் சட்டமன்றத்தில் ஓகி புயல் பாதிப்பு, ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா  போன்ற அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி விவாதிக்க தயாராக  உள்ளனர்.

இதுபோன்ற ஒரு சூழலில் சட்டமன்ற கூட்டம் தொடங்க இருப்பதால், சட்டமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள்,  அதிமுக எம்எல்ஏக்கள் அணி மாறாமல் இருப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று(3ம் தேதி) காலை 10 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகிக்கிறார்கள். கூட்டத்தில் அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் மெஜாரிட்டியை நிரூபிக்க 117 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால், ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு 113 எம்எல்ஏக்கள் ஆதரவு தற்போது உள்ளது. அதன்படி தற்போது மெஜாரிட்டியை நிரூபிக்க 109 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை.