அதிமுக எம்.பி. புகார்: எச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு!

கடலூர்:

அ.தி.மு.க  எம்.பி அருண்மொழித்தேவன் அளித்த புகாரின் அடிப்படையில், பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சர்ச்சை புகழ் எச்.ராஜா,  கோவில் சிலைகளை கோவில் அதிகாரிகளே திருடுகிறார்கள் என்றும்,.  கடலூர் அ.தி.மு.க எம்.பி. அருண்மொழித் தேவன் சுமார் 200 ஏக்கர் அளவில் கோவில் நிலத்தை ஆக்ரமித்ததாக எச்.ராஜா அவர் மீது குற்றஞ்சாட்டினார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. எச்.ராஜாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கோவில் பணியாளர்கள் சார்பில் பல மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  தன் மீது அவதூறு புகார் அளித்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கும்படி,  அதிமுக எம்.பி., அருண்மொழித் தேவன் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் எச்.ராஜா மீது மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.