கேரளாவுக்கு அதிமுக எம்.பி, எம்எல்ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வழங்கல்…..முதல்வர் பழனிச்சாமி

சென்னை:

கேரளா வெள்ள நிவாரணத்துக்கு அதிமுக எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு அதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிதியாக தருவார்கள். மேலும், கேரளாவுக்கு உணவு, உடை உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.