அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்கள்,  சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். வசந்தகுமார் எம்.பி.யும், ஜெ.அன்பழகன் எம்எல்ஏ வும் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு  நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.