வாணியம்பாடி:

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து   ஒன்றரை லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர்  பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் அருகே உள்ள ராணிப்பேட்டை  நிம்மியம்பட்டு  பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துகொண்டிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த பகுதிக்கு விரைந்தனர். அப்போது, அங்கு அதிமுக நோட்டீஸ் மற்றும் அதனுடன் பணத்தையும் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து  வந்த நபரை   கையும் களவுமாக மடக்கினர்.

அவரிடம் ரூ 1லட்சது 58 ஆயிரத்து 900 பணம் இருந்தது. அதை கைப்பற்றிய தேர்தல் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் பெயர் சம்பத் என்பதும், அங்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூறி பணப்பட்டுவாடா செய்து வந்தாகவும் கூறி உள்ளார்.

இதேபோல மரிமாணிக்கம் பகுதியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டிருந்த கோபி மற்றும் மேகநாதன் ஆகியோரை தனித்தனியே மடக்கிய தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், அவர்களிடம் இருந்து 38 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.