பல்லாவரம் அருகே அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை!

சென்னை,

ல்லாவரம் அருகே அதிமுக பிரமுகர் மர்ம கும்பலால்கு சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

பல்லாவரம் அருகே உள்ள திருநீர் மலை பகுதி அதிமுக பிரமுகர் அபுல்சாலி.

இன்று பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.  4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.

சம்பவ இடத்திலேயே அபுல்சாலி மரணமடைந்தார்.

போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உள்கட்சி பூசல் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும்,  கொலை கும்பலை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.