சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் தொடரும்  பாமகவிடம் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக,தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து பெரும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், விரைவில் நடைபெற உள்ள தேர்தலிலும் கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், தமிழக அரசை விமர்சித்து பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுகதிக, பாஜகவினர் விமர்சித்து வருவது அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனால்,  பாமக, தேமுதிக போன்ற கட்சகிள் அதிமுக கூட்டணியில் தொடருமான என கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில், இன்று முதல்கட்டமாக அதிமுக சார்பில் பாமவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பாமக தலைவர் ராமதாஸ் தங்கியுள்ள திண்டிவனம் அருகே உள்ள தைலாப்புரம் தோட்டத்தில் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும், இந்த பேச்சுவார்த்தையில், அதிமுக சார்பில், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.