டில்லி,

திமுகவில் தற்போது நடைபெற்று வருவது நகைச்சுவையாகவும், கேலிக்கூத்தாவும் மாறி வருகின்றன என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார். மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழக கவர்னர் எங்கே என்றும் கேள்வி விடுத்துள்ளார்.

அதிமுகவில் அதிகாரப்போட்டிக்காக தற்போது நடைபெற்றும் அரசியல் கேலிக்கூத்து குறித்து தமிழக பொறுப்பு கவர்னர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி விடுத்துள்ளார்.

234 உறுப்பினர்கள் கொண்ட தமிழக சட்டசபையில்,  ஜெயலலிதா மறைவை தொடர்ந்து 233 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக உறுப்பினர்கள் செயற்கை முறையில் அணி மாறுவதற்கு கவர்னர் வாய்ப்பு அளிக்ககூடாது என்றும் கூறி உள்ளார்.

மேலும் தற்போதைய தமிழக அரசு மோடியின்  அரசாக செயல்பட்டு வருகிறது என்றும், விரைவில் அது பாரதியஜனதாவுடன் இணையும் என்றும், தற்போது அதிமுகவின் ஒரு குழுவினர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது அந்த கட்சியின் உள்கட்சி பிரச்சினை என்றும், இதன் காரணமாக தமிழக அரசுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று கூறியுள்ளார்.

தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு காரணம்,  அதிமுவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்தபிறகு, கட்சியின் பொதுச் செயலாளரின் பதவியில் இருந்து சசிகலாவை அகற்றுவதற்கான எடுக்கப்பட்டுள்ள முடிவு என்று அவர் கூறி உள்ளார்.