சென்னை:

2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள சீன அதிபருக்கு சென்னை விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளிக்கல்லூரி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் உள்பட  தவில், நாதஸ்வரம் இசைத்தும், கொம்பு ஊதியும், சீன அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பறையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பரதம், கதகறி உள்பட  தமிழ்நாட்டு பாரம்பரிய கலைநிகழ்வுகளுடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

சீன அதிபர் ஜி ஜின்பிங், கையை அசைத்து, கலைஞர்களை உற்சாகப்படுத்தி, கலைஞர்களின் வரவேற்பினை ஏற்று சென்றார்.

ஆனால், இந்த வரவேற்பு நிகழ்சியின்போது, பரதம் ஆடிய மாணவிகள் தலையில் சூடியிருந்த மல்ர்  கருப்பு வெள்ளை சிவப்பு  நிறத்தில் காணப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தின.

அதிமுக கொடியின் கலரான,  கருப்பு வெள்ளை சிவப்பு கலரிலான பூக்களையே அனைத்து மாணவிகளும் தலையில் சூடி, சீன அதிபர் ஜிஜின்பிங்கை பரதம் ஆடி வரவேற்றனர்.

அதிமுகவின் கேவலமான இந்த செயல்  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதிமுகவின் கொடி வண்ணத்திலான மலர் சூடி ஆடும் பரத மாணவிகள்

இருநாடு உறவுகளை வலுப்படுத்தும் வகையில், பாரம்பரிய புராதன நகரான மாமல்லபுரத்துக்கு சீன நாட்டின் அதிபர் வருகை தந்ததிலும், அதிமுக அரசு தனது கீழ்த்தரமான  அரசியலை புகுத்தி இருப்பது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

அயல்நாட்டு அதிபரை வரவேற்பதிலும், அதிமுக அரசு அரசியல் செய்திருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  ஏற்கனவே தமிழகஅரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், தற்போது சீன அதிபர் வரவேற்பிலும் அதிமுக செய்துள்ள அரசியல்,  பொதுமக்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.