கஜா புயல் நிவாரணத்துக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கல்

சென்னை:

ஜா புயல் நிவாரண நிதியாக அதிமுக கட்சி சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டது. இந்த நிதியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முதல்வர் பழனிச்சாமியிடம் தலைமை செயலகத்தில் வழங்கினார்.

கடந்த 16ந்தேதி அதிகாலை வேதாரண்யத்தில் கரையை கடந்த கஜா புயல், டெல்டா மாவட் டங்கள் உள்பட 10 மாவட்டங்களில் பேரழைவை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை தொலைத்து உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. நிவாரணத்துக்கு பொதுமக்கள், தனியர் அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் நிதி உதவி வழங்க தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து, திமுக உள்பட அரசியல் கட்சிகள், பிரபல தனியார் நிறுவனங்கள் முதல்வரை சந்தித்து நிதி வழங்கி வருகின்றன. இந்த நிலையில்  அதிமுக கட்சி சாா்பில் ரூ.1 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.  நிவாரண நிதிரூ.1 கோடியை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், முதல்வா் பழனிசாமியிடம் வழங்கினாா்.

கேரளா மாநில ஆளுனராக உள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதியான சதாசிவமும் ரூ.1 லட்சம் நிவாரண நிதியை வழங்கியுள்ளாா்.