பாராளுமன்ற தேர்தல்: கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்து பேச அதிமுகவில் குழுக்கள் அமைப்பு

சென்னை:

திமுக சார்பில் மக்களவை தேர்தல் குறித்து பேச்சு வார்த்தை நடத்த, தேர்தல் அறிக்கை தயாரிக்க, பிரசார குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

நாடாளுமன்ற தேர்தல்  தொகுதி பங்கீடு குறித்து  பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி., செய்தி தொடர்பாளர்  கேசிடி பிரபாகர், அமைச்சர்கள் தங்க மணி, வேலுமணி ஆகியோர்  இடம் பெற்று உள்ளனர்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில்  பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள்  ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை. மனோஜ் பாண்டியன், பெர்னாட் ஆகிய 7 பேர் இடம் பெற்று உள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முறைப்படுத்த தம்பிதுரை உள்ளிட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன்,  வளர்மதி, கோகுல இந்திரா, வைகை செல்வன், வேணுகோபால் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ', 'Coalition, admk manifesto, AIADMK setup teams, constituency allotment, parliamentary election
-=-