சென்னை:

காலியாக உள்ள  4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி ;விருப்பமனு பெறலாம் என அக்கட்சியின் சார்பில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்  அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், அரவக்குறிச்சி சூலூர்  ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி காலியாக உள்ள அந்த 4 தொகுதிகளுக்கும்  மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த 4 தொகுதி இடைத்தேர்தலில்,தமிழகத்தின் பிரதான கட்சிகள் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுக சார்பில் 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரசாரத்தையும் முன்னெடுத்துள்ள நிலையில், அதிமுக தற்போதுதான்  போட்டியிட விரும்புவோர் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று கூறி உள்ளது.

இதுகுறித்து  இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் என்றும்,  விண்ணப்ப கட்டணத்தொகையாக ரூ.25 ஆயிரத்தை செலுத்தி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அன்றைய தினமே வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளது.