அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம்! ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு…

சென்னை: பொள்ளாச்சி சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவரணி செயலாளர் அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்  அறிவித்து உள்ளனர்.
இதுகுறித்து  முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். அதில், கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாக, பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
https://www.patrikai.com/pollachi-sexucal-case-arrested-arulanantham-who-is-close-to-minister-velumani-and-pollachi-jayaraman/