அதிமுக வேலூர் மாவட்ட செயலாளர் கோவை சத்யா நீக்கம்

சென்னை:
வேலூர் மாட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கோவை சத்யா நீக்கப்பட்டார்.

இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தொழில்நுட்ப பிரிவின் வேலூர் மண்டலச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கோவை சத்யா நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீக்கப்பட்டுள்ள கோவை சத்யாவுக்கு பதிலாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் வேலூர் மண்டலச் செயலார் பொறுப்பில், ஜனனி பி. சதீஷ்குமார் இன்று முதல் நியமிக்கப்படுவதாகவும், இவருக்கு அதிமுக தொண்டர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.