ஓபிஎஸ் இல்லத்தில் குவியும் அதிமுக தொண்டர்கள்! போலீஸ் குவிப்பு!!

சென்னை,

சிலாவின் நிர்பந்தத்தால், என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய சொன்னார்கள் என்று நேற்று  இரவு ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்துவிட்டு, செய்திளார்களிடம் அதிரடி தகவலை வெளியிட்டார் ஓபிஎஸ்.

தமிழக முதல்வர் ஓபிஎஸ் கொடுத்த இந்த  அதிரடி பேட்டியை தொடர்ந்து,  அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் ஓபிஎஸ் வீட்டை முற்றுகையிட்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே அதிமுக அடிமட்ட தொண்டர்கள் யாரும் சசிகலா பதவிக்கு வருவதை விரும்பாத நிலையில், ஓபிஎஸ்-ன் இந்த அதிரடி அறிவிப்பு  அதிமுக தொண்டர்களுக்கு புது உற்சாகத்தை கொடுத்துள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது. சென்னை அடையாறு  பசுமைவழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக தொண்டர்கள்  அவரது வீட்டில் குவிந்துள்ளனர்.

மேலும் வெளியூர்களில் இருந்து தொண்டர்கள் சென்னையை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

 

நள்ளிரவு முதலே அதிமுக தொண்டர்களும்,  பெண்களும்  ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவாக அவரது வீட்டு முன் கோஷ மிட்டனர்.

மற்றொருபுரம் சசிகலாவுக்கு ஆதரவானவர்கள் போயஸ் தோட்டத்தை நோக்கி  படையெடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் தமிழகம் முழுவதும் போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்.