சென்னை:

ள்ளாட்சி தேர்தல்  முடிவு எப்படி இருந்தாலும், அதை அதிமுக தலைவணங்கி ஏற்றுக் கொள்ளும் என்று துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான  ஓபிஎஸ் கூறினார்.

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில், திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியான அதிமுக எதிர்பாராத தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை, துணைமுதல்வர் ஓபிஎஸ்-சிடம் தேல்தல் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,  “உள்ளாட்சி தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் அதிமுக தலைவணங்கி ஏற்றுக் கொள்ளும்.”  என்று கூறிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து சென்றுவிட்டார்.