திருப்பரங்குன்றத்தில் அதிமுக அமோக வெற்றிபெறும்: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மதுரை:

ன்று மதுரை வந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அப்போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று கூறினார். மேலும், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து முதலமைச்சர்தான் முடிவு செய்ய முடியும் என்றும் கூறினார்.

துணைமுதல்வர் ஓபிஎஸ் உடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மதுரை முன்னாள் மேயர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் உள்பட அதிமுகவினர் வந்திருந்தனர்.

சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது,

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான தரிசிக்க நாங்கள் வந்தோம்.  வெற்றி மீது வெற்றி பெறும் முருகனை தரிசித்துவிட்டு வந்திருக்கிறோம் என்றார்.

அவரிடம் செய்தியாளர்கள் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கும்.  திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார். இடைத்தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகளை அ.தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள்.   வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களையும் அ.தி.மு.க. எடுக்கும் என்றார்.

டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் வெற்றிபோல, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும்   தான்தான் வெற்றி பெறுவேன் என்று கூறுகிறாரே என்ற கேள்விக்கு,  டிடிவி பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும் என்றவர்,  அதிமுக இந்த அளவுக்கு மிகப்பெரிய தர்மயுத்தத்தை நடத்தி அந்த குடும்பத்தில் இருந்து விடுதலை பெற்று தற்போது தொண்டர்கள் இயக்கமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அம்மாவின் ஆட்சி தொடர்ந்து, அம்மாவின் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தும்.

டிடிவி தினகரன்   தனியாக பிரிந்து சென்றார். அவர்  மீண்டும் அதிமுகவை  பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அது எந்த காலத்திலும் வெற்றி பெறாது என்று கூறினார்.

அ.தி.மு.க.வில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகிறரே என்ற கேள்விக்கு, அவரது கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று மறுத்து விட்டார்.

அதுபோல, பாஜகவுக்கு எதிரான ஸ்டாலின் விமர்சனம் குறித்த கேள்விக்கும், அது அவரது சொந்த கருத்தாக இருக்கலாம். அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

நடிகர் கமல்ஹாசன்  ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடப்போவதாக கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, நடிகர் கமல்ஹாசன் நொடிக்கு ஒருமுறை மாற்றி பேசி வருகிறார். எனவே அவரது பேச்சை பொருட் படுத்த தேவை யில்லை என்றார்.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமா என்பதற்கு, அமைச்சரவையை மாற்றுவது குறித்து முதல்- அமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றவர்,  வருகிற பாராளு மன்ற தேர்தலில் அ.தி. மு.க. தலைமையில் கூட்டணி அமையும். கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முதல்- அமைச்சரிடம் ஆலோசித்து முடிவு செய்வோம். எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றுள்ள நிலையில், துணைமுதல்வர்  ஓபிஎஸ் திருப்பரங்குன்றத்தில் தனி அணியாக சென்று  சாமி தரிசனம் செய்தார். முக்கிய தலைவர்கள் இருவரும் தனித்தனியாக கோவில்களில் முகாமிட்டிருப்பது இரு தரப்பினரும் இன்னும் முழுமையாக இணையவில்லை என்று அதிமுகவினர்  தொண்டர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: AIADMK will succeed in Thiruparankundram by-election. said Tamil nadu Deputy Chief Minister O.Panneerselvam, திருப்பரங்குன்றத்தில் அதிமுக அமோக வெற்றிபெறும்: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
-=-