தமிழகம் மற்றும் புதுவைக்கு காங்கிரஸ் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

டில்லி

காங்கிரஸ் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களை நியமனம் செய்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன.  இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து களமிறங்க உள்ளன.  இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளர்களை நியமித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,

“மதிப்புக்குரிய காங்கிரஸ் தலைவர் கீழ்க்காணுவோரைத் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் பார்வையாளர்களாக நியமித்துள்ளார்.

  1. திக் விஜய் சிங் – தலைவர்
  2. ஃபிரான்சிஸ்கோ சர்தின்ஹா – உறுப்பினர்
  3. கொடிக்குன்னில் சுரேஷ் – உறுப்பினர்

இணை உறுப்பினர்கள்

  1. தினேஷ் குண்டு ராவ் – காங்கிரஸ் பொறுப்பாளர்
  2. கே எஸ் அழகிரி – தமிழக மாநில காங்கிரஸ் தலைவர்
  3. ஏ வி சுப்ரமணியன் – புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர்
  4. கே ஆர் ராமசாமி – தமிழக காங்கிரஸ்
  5. வி நாராயணசாமி – புதுச்சேரி காங்கிரஸ்
  6. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் செயலர்கள்”

என அறிவிக்கப்பட்டுள்ளது