விரைவில் காங்கிரஸ் மத்திய தேர்தல் அங்கீகாரத்  தலைவரின் ஆலோசனைக் கூட்டம்

டில்லி

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் அங்கீகாரத் தலைவர் விரைவில் ஆலோசனைக்கூட்டம் நடத்த உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் அங்கீகாரத் தலைவராக மதுசூதன் மிஸ்திரி பதவி வகித்து வருகிறார்.  அவர் விரைவில் ஒரு ஆலோசனைக்கூட்டம் நடத்த உள்ளார்.  இது குறித்து அவர் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், “விரைவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளோம்.  இதற்கான தேதி மற்றும் நடக்குமிடம் முடிவு செய்த பின் அறிவிக்கப்படும்.

இந்த கூட்டத்தில் பங்கு பெற முன் அனுமதி கோரும் காங்கிரஸ் உறுப்பினர்கள் உங்கள் பெயர், இ மெயில் ஐடி, மொபைல் எண் உடன் ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கவும்.  இதைக் கொண்டு உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விவரங்களை org@inc.in maRRum cca@inc.in ஆகிய இ மெயில் ஐடி க்கு அனுப்பி அதன் நகலை அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் மத்திய  தேர்தல் அங்கீகார தலைவருக்கு அனுப்ப வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.