கொரோனா : அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் பாதிப்பு

டில்லி

கில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்,

இந்தியாவில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது.

பல அரசியல் மற்றும் கலை உலக பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

நேற்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்துக்கு கொரோனா உறுதி ஆகி உள்ளது.

சஞ்சய் தத் தனது டிவிட்டரில்

நான் வழக்கமாக சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்பு செய்வதைப் போல் கொரொனா பரிசோதனை செய்துக் கொண்டேன்.

அதில் கொரோனா தொற்று உறுதி ஆனதையொட்டி நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தோர் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.

பாதுகாப்பாக இருங்கள்,   நலமுடன் இருங்கள்

எனப் பதிந்துள்ளார்.