300 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்த ஏஐசிடிஇ முடிவு!!

டில்லி:

தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக 30 சதவீதத்திற்கு மேல் மாணவர்கள் சேராதஹ்£ல் நாடு முழுவதும் 300 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) முடிவு செய்துள்ளது.

இது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘நாடு முழுதும் 3 ஆயிரம் தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு 13.56 லட்சம் மாணவர்கள் பயில முடியும். இ க்கல்லூரிகளை ஆய்வு செய்த போது 300 கல்லூரிகளில் தொடர்ந்து 5 வருடங்களாக 30 சதவீதத்திற்கு கீழ் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் இந்த கல்லூரிகளில் வரும் 2018&19 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கவும், பொறியியல் கல்லூரியாக செயல்படவும் தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளை கலை அறிவியல் அல்லது தொழிற் கல்வி கல்லூரிகளாக மாற்றி கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 20 சதவீதம் கூட மாணவர் சேர்க்கை நடக்கவில்லை’’ என்றார்.

இது தொடர்பாக ஏஐசிடிஇ தலைவர் பேராசிரியர் அனில் டி சகாஸ்ரபுதே கூறுகையில், ‘‘ கல்லூரிகள் மூ டுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறோம். கல்லூரிகளை மூடுவது எளிது. எனினும் அதனால் சில பிரச்னைகள் ஏற்படும். முதலீடு, வங்கி கடன் போன்று கல்லூரிகளை முழுமையாக ஆய்வு செய்த பின் மூடுவதற்கு பதில் மாற்று வழிகளை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். இது குறித்து டிசம்பருக்குள் முடிவு செய்யப்படும்’’ என்றார்.