டெல்லி: பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்த மாணவர்கள் நவம்பர் 10ந்தேதிக்கு முன்பு விலகினால், அவர்களின் கட்டணத்தை திருப்பி அளிக்க ஏஐசிடியு உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (AICTE) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்,  தன்னாட்சி பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில், படிப்புக்காக சேர்ந்துள்ள மாணவர்கள்,  நவம்பர் 10ந்தேதிக்கு முன்னாள், அவர்கள் அந்நிறுவனங்களில் இருந்து விலகினால், அவர்கள் செலுத்திய கட்டணத்தில், செயலாக்க கட்டணம் (Processing fees) தவிர மற்ற கட்டணங்களை திருப்பி அளிக்க வேண்டும் என்றும், அதிகபட்சமாக ரூ.1000க்கு மிகாமல்  செயலாக்கக் கட்டணத்தை கழித்த பின்னர், கட்டணத்தை முழுவதுமாக திருப்பி வழங்க வேண்டும் என, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.