டெம்பிள் பல்கலைக்கழகத்தின் லூயிஸ் கட்ஸ் மருத்துவப் பள்ளி ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கடந்த அரை தசாப்தத்தில் மனித குலத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மிகவும் சவாலான வைரஸ்களில் ஒன்றான HIV, அதாவது மனிதனின் எதிர்ப்பாற்றல் குறைப்பு வைரஸ் (ஹ்யூமன் இம்யூனோ டெஃபீஷியென்சி) வைரஸிற்கு, அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு சிகிச்சை கண்டுபிடிக்கப்படலாம்.
AIDS
1980 களிலிருந்து 25 மில்லியன் மக்கள் உயிரிழக்கக் காரணமாக இருந்த இந்த வைரஸை செல்களிலுள்ள டிஎன்ஏ விலிருந்து வெளியே எடுக்கும் வழியைக் கண்டுபிடித்துள்ளதாகவும் அடுத்த மூன்று ஆண்டுகளில் மக்கள் மீது சோதனைகள் தொடங்க தயாராகவுள்ளதாகவும்  டெம்பிள் பல்கலைக்கழகத்தின் லூயிஸ் கட்ஸ் மருத்துவப் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்ததாக டெலிக்ராஃப் ஃபர்ஸ்ட் கூறியுள்ளது.
இதுவரை, ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கூடத்தில் மட்டுமே வைரஸை அகற்றியுள்ளனர், அந்த ஆய்வு சோதனைகளில் அவர்களால் ஹெச்ஐவியை கட்டுபடுத்த முடியும் என்று தெரிய வந்துள்ளது. தற்போது ரெட்ரோ வைரல் எதிர் மருந்து சிகிச்சை மூலம் ஹெச்ஐவியை குணப்படுத்தும்  பெரும்பாலான மருந்துகள், ஹெச்ஐவி பெருக்கத்தில் ஒரு விரைவான மீட்சி காட்டுவதாக லூயிஸ் கட்ஸ் மருத்துவப் பள்ளியின் பேராசிரியரும் இந்த ஆய்வின் மூத்த ஆராய்ச்சியாளருமான கமால் காலிலி கூறினார்.
TMEPLE UNIV LOGO 1
எச் ஐ வி, மனித உடலை ஏமாற்றி தவறான டிஎன்ஏ வை உருவாக்கி மனிதனின் நோய் எதிர்ப்பு அமைப்பை பலவீனப்படுத்தி, எதிர்காலத் தொற்றுதலுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது. அதாவது எச் ஐ வி, நோய் எதிர்ப்பு அமைப்பை பலவீனப்படுத்தி  இறுதியில் நோய் எதிர்ப்பு குறைபாடு நோய் என்றழைக்கப்படும் எய்ட்ஸ் நோயை ஏற்பத்தலாம். டெம்பிள் பல்கலைக்கழகத்தின் சிகிச்சையில், டி-செல் மரபணுவிலுள்ள தவறா ன டிஎன்ஏ, எச் ஐ வி -1 ப்ரோவைரல் டிஎன்ஏ வை கண்டுபிடித்து அதை வெட்டிவிடுகிறது. வெட்டப்பட்டபின் மீதமிருக்கும் டிஎன்ஏ உடலின் வழக்கமான வழிமுறைகள் மூலம் மீண்டும் ஒன்றாக ஒட்டிக்கொள்கின்றன.
ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, செயல்முறைக்குப் பிறகும், இச்சிகிச்சை செல்கள் வளர்ந்து வழக்கமாக செயல்படுவதை காட்டுகிறது, மேலும் மற்ற மரபணுக்களை இந்த
சிகிச்சையைப் பாதிக்கவில்லை என்பதுமாகும்.
HIV-AIDS
“மேலும், இந்த அமைப்பால் செல்களுக்கு மீண்டும் பாதிப்பு வராமல் பாதுகாக்க முடியும் என்றும் இந்த தொழில்நுட்பம்  எந்த நச்சு விளைவுகளும் இல்லாமல் செல்களுக்கு பாதுகாப்பாக உள்ளது என்றும் இந்த கண்டுபிடிப்பு காட்டுகிறது,” என்று காலில் ஒரு அறிக்கையில் எழுதினார்.
Temple univ 1
 
தொடர்புடையப் பதிவு:
எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை : உலக அளவில் இந்தியா 3 ஆவது இடம்