மத்திய அரசின் முடிவினால் இந்தியாவில் அனைவருக்கும் எய்ட்ஸ் வரும்: நடிகை ராக்கி சாவந்த் அதிரடி பேச்சு

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொலைக்காட்சியில்  ஆணுறை விளம்பரங்களை விளம்பரம் செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த முடிவை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். “நாட்டின் மக்கள் தொகை பெருக்கம் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருந்து வருகிறது. தவிர பாதுகாப்பற்ற உடல் உறவால் எய்ட்ஸ் பரவி வருகிறது. இந்த நிலையில் ஆணுறை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் ஆணுறை விளம்பரங்களை ஏன் தடை செய்ய வேண்டும்” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பாலிவுட் நட்சத்திரங்களான ராக்கி சாவந்த், சன்னி லியோன், பிபாஷா பாசு உள்பட பலர் ஆணுறை விளம்பரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், மத்திய அரசின் முடிவுக்கு ராக்கி சாவந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர், “சமூக சேவையாக நினைத்தே நான் ஆணுறை விளம்பரங்களில் நடித்தேன். இதற்கு முன்னதாக சன்னி லியோன் மற்றும் பிபாஷா பாசு ஆகியோர் நடித்த போது அரசு தடை செய்யவில்லை. அப்படியிருக்கும் போது,  நான் ஆணுறை விளம்பரத்தில் நடித்த போது மட்டும் மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆணுறை விளம்பரத்தை நிறுத்தினால் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் எய்ட்ஸ் வரும். தன்னை குறி வைத்து தான் அரசு இந்த ஆணுறை விளம்பரத்திற்கு தடை விதித்துள்ளது” என்று தெரிவித்துள்ள ராக்கி, “இந்த விளம்பரத்தில் தான் நடிப்பதற்கு பிரதமர் மோடி ஆதரவு தந்து தடையை நீக்குவார் என்று நம்புகிறேன்” என்றும் ராக்கி தெரிவித்துள்ளார்.