மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை: எடப்பாடி தகவல்

சென்னை:

துரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

இதற்கான மத்திய அரசின் உத்தரவை  தமிழக சுகாதார துறைக்கு  அனுப்பி வைத்துள்ளதாகவும், மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்றும்  முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை தலைமைசெயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது,

மறைந்த  ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு  கோரிக்கை விடுத்தார். அதையேற்று மத்திய அரசு அதிகாரிகள், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ள  5 இடங்களை  பார்வையிட்டனர்.

செங்கல்பட்டு, மதுரை, செங்கிப்பட்டி, பெருந்துறை, புதுக்கோட்டையில் மத்திய குழு அதிகாரிகள் பார்வை யிட்டனர். அதைத்தொடர்ந்து,  தற்போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற உத்தரவை, தமிழக சுகாதார துறை செயலருக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

மதுரையில் தோப்பூர் என்ற இடத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை  அமைய உள்ளது. இந்த மருத்துவமனையில்  750 படுக்கை வசதிகளுடன் நவீன மருத்துவமனையாக அமையும் என்றுகூறினார்.

மேலும், இந்த மருத்துவமனையில் மருத்துவக்கல்லுலூரியும் தொடங்கப்படும், முதல்கட்டமாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும். அதுபோல செவிலியர் ப பயிற்சி படிக்கும் வசதியும் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த மருத்துவமனை சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பில்  அமைக்கப்பட இருப்பதாகவும், அதற்கு தேவையான தமிழக அரசு செய்யும் என்றும் கூறினார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட்ட பிரதமருக்கும், விரைவாக செயல்பட்ட சுகாதார அமைச்சருக்கும் எனது சார்பாகவும், மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: AIIMS hospital in Madurai near Thoppur: Edappadi Information, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை: எடப்பாடி தகவல்
-=-