மதுரை:

மிழகத்தின் நீண்டகால கனவான  எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய உள்ளது. இந்த மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையுடன் பெறப்போகும் வசதிகள் குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

750 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை மற்றும் 100 பேர் மருத்துவம் படிக்கும் வகையிலான மருத்துவக்கல்லூரி உடன் செவிலியர் கல்லூரிகளும் அமையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தென் தமிழகத்தில் சகல மருத்துவ வசதிகளும் கொண்ட மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவ மனை மதுரையில் அமைய உள்ளது.

மதுரை தோப்பூரில் ரூ.1,258 கோடியில் அனைத்து வசதிகளுடன் பிரமாண்டமான எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்கிறது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனை பெறப்போகும் வசதிகள் குறித்தும் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை திருப்பரங் குன்றம் அருகே உள்ள தோப்பூரில் இதற்காக 200 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு உள்ளது. மற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவமனை 750 படுக்கை வசதி களுடன் நவீன முறையில் அமைக்கப்பட உள்ளது. மேலும் 11 சிறப்பு மருத்துவ பரிவுகள், 15 சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகளுடன் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளது.

அத்துடன் 100 மாணவ மாணவிகள் மருத்துவம் படிக்கும் வகையில் மருத்துவக் கல்லூரி மற்றும் 60 பேர் படிக்கும் வகையிலான செவிலியர் கல்லூரி களும் இயங்கும் என்று அறிவித்துள்ளது.

The proposed institution shall have a Medical College with 100 under graduate (MBBS) s and  seats.