டெல்லி:

துரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான மத்தியஅரசின் அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியபோது எடுத்த படம் (பைல்)

மதுரை தோப்பூரில் ரூ 1264 கோடி திட்ட மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2018ம்ஆண்டு வெளியான நிலையில்,  கடந்த ஆண்டு (2019)  ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரை வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
சுமார் 202 ஏக்கரில் 750 படுக்கை வசதியுடன் கட்டப்படும் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணிகள்  48 மாதங்களில் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்களும், 60 செவிலியர் படிப்பிற்கான இடங்களும் அனுமதிக்கப் படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக  கடந்த நவம்பர் மாதம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள், தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை உறுதி செய்யும் வகையில், மத்தியஅரசின் அரசிதழில் அரசாணை நேற்று வெளியிடப்பட்டு உள்ளது.